மாநில செய்திகள்
மதுரை உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி
மாநில செய்திகள்

மதுரை உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி

தினத்தந்தி
|
12 Jan 2023 7:40 PM IST

மதுரை உள்பட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவையை தொடங்குவதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் லண்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் மதுரையில் இருந்து விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் தற்போது இயக்கிறது. இந்நிலையில் இரவு நேர உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை மதுரை உள்பட 5 விமான நிலையங்களில் தொடங்குவதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி மதுரை, அகர்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய 5 விமான நிலையங்களில் வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 24 மணி நேர விமான சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் விமான வான் போக்குவரத்து கட்டுப்பாடு, வலைதள தொடர்பு சேவை ஆகிய பிரிவுகளில் ஆட்கள் பணி நியமனம் செய்வதற்கும், விமான் நிலைய பாதுகாப்பு பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.





மேலும் செய்திகள்